“ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி” படங்களுக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.
இந்தப் படத்தில் ‘பசங்க’ கிஷோர், நடிகை விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும், பாடல்களும் கிடையாது.
படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது,
“ஆரம்பத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில், முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை.
ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் தற்காலிகத் தடை காரணமாக, எனக்கு முன்னோக்கி செல்ல தயக்கமாக இருந்தது. அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் கூட உறுதி செய்யப்பட்டு விட்டன.
மேலும், நான் நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ, அதை எப்போதும் செய்திருக்கிறேன், அதைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது என உணர்ந்தேன். “ஹவுஸ் ஓனர்” படப்பிடிப்பை ஆரம்பித்தோம், “என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரம் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குகிறது.
செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். பிரேம் எடிட்டிங்கும், கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவும் செய்கிறார்கள்.
படத்துக்கு பின்னணி இசை மட்டும், தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்துவிட்டு இசையமைப்பாளரை உறுதி செய்ய உள்ளோம்,” எனச் சொல்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.