விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் விஜய் சேதுபதியின் 25வது படமாக உருவாக உள்ளது ‘சீதக்காதி’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, 80 வயது முதியவராக நடிக்கிறார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு பக்க கதை’ படங்களுக்குப் பிறகு பாலாஜி தரணிதரன் இயக்கவிருக்கும் படம் இது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மேக்கப் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது பற்றிய மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது.

படம் பற்றி விஜய் சேதுபதி கூறியதாவது,

“சீதக்காதி, சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார்.

ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார்.

80 வயதான நாடகக் கலைஞனாக இந்தப் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் ஒரு ஆத்மார்த்தமான படம். கலைக்கு முடிவே இல்லை, அது சாகாவரம் பெற்றது என்ற செய்தியை இந்தப் படம் சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். எனது 25வது படமாக இந்த படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்,” என்றார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைப் பெற்று வருகிறது.

Read Previous

‘குயின்’ ரீமேக், நான்கு மொழிகளிலும் விரைவில் நிறைவு

Read Next

சென்னை வெள்ளப் பின்னணியில் ‘ஹவுஸ் ஓனர்’

Most Popular