ஹிந்தி சூப்பர் ஹிட் படமான ‘குயின்’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில், நான்கு கதாநாயகிகளான தமன்னா (தெலுங்கு), காஜல் அகர்வால் (தமிழ்), மஞ்சிமா மோகன் (மலையாளம்), மற்றும் பர்ல் யாதவ் (கன்னடம்) ஆகியோருடன் நடைப்பெற்றது.
தமிழில் இப்படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட் இஸ் மஹாலக்ஷ்மி ‘, மலையாளத்தில் ‘சாம் சாம்’, மற்றும் கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ரமேஷ் அரவிந்த், தமிழ் மற்றும் கன்னட படங்களின் இயக்குநர் ஆவார். பிரஷாந்த் வர்மா தெலுங்கு பட இயக்குநராகவும், ஜி நீலகாந்த ரெட்டி மலையாள பட இயக்குநராகவும் உள்ளனர்.
இந்தியா திரும்பிய நான்கு கதாநாயகிகளில், மஞ்சிமா மோகனும் , காஜல் அகர்வாலும் வேறு திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.