சென்னைக்கு வந்து பேட்டி கொடுத்த ஸ்ரீ ரெட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் பாலியல் தொந்தரவுகள் உண்டு என்று வெளிப்படையாக அறிவித்து, அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி. அதன் பின் அவரைப் பற்றிய செய்தி என்றாலே தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தெலுங்கு மீடியாக்களும் அவரைப் பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென தமிழ்த் திரையுலகம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார் ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ், சுந்தர் .சி ஆகியோரைப் பற்றி அவரது முகப்புத்தகத்தில் குற்றம் சாட்டினர்.

அதையடுத்து தமிழ்த் திரையுலகத்திலும், தமிழ் மீடியாக்களிலும் ஸ்ரீ ரெட்டி பற்றிய செய்திகள் தினமும் இடம் பெறுவது கட்டாயமாக இருந்தது. தமிழ் மீடியாக்களிலிருந்து பலரும் ஸ்ரீ ரெட்டியிடம் பேட்டி வேண்டுமென கேட்டிருக்கிறார்கள்.

அதற்காகவே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குப் பறந்து வந்து பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. சில டிவிக்கள் ஏற்கெனவே ஸ்ரீ ரெட்டி பேட்டியை ஒளிபரப்பிவிட்டன.

மேலும் பல பத்திரிகை, இதழ்களிலும் ஸ்ரீ ரெட்டி பேட்டி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும்.

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து சிலர் மட்டுமே பதில் அளித்திருக்கிறார்கள். சிலர் இன்னும் அது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Read Previous

Thimiru Pudichavan – Official Motion Poster

Read Next

‘குயின்’ ரீமேக், நான்கு மொழிகளிலும் விரைவில் நிறைவு

Most Popular