விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு என்று எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.
‘கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து குழந்தைகள் பங்கு பெறும் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜுனியர்’ நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது ‘கிங்ஸ் ஆப் காமெடி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சனிக்கிழமை 28ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது.
ஒவ்வொரு வாரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
ரோபோ சங்கர், வாணி போஜன், ஈரோடு மகேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர்.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடைய சுட்டித்தனம், குறும்பு, மழலைப் பேச்சு ஆகியவற்றால் நம்மை ரசிக்க வைக்கப் போகிறார்கள்.
முதல் சீசனைப் போலவே இந்த இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.