விஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்

விஜய் டிவியில் புத்தம் புதிய மர்மத் தொடர் ‘அதே கண்கள்’ வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் ‘நசர்’ என்ற ஹிந்தித் தொடரின் டப்பிங் வடிவம்தான் இந்தத் தொடர்.

200 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஒரு தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக் கொள்ள மனிதர்களை கொல்வாள்.

ரத்தோட் குடும்பத்தை சேர்ந்த மிரிதுல் என்பவரைக் கவர்ந்து திருமணம் செய்து கொள்கிறார் மோகினி. மிரிதுலைக் கொன்று இளமை அடைய வேண்டும் என்பதுதுன் மோகினியின் எண்ணம். அதன்படி அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறாள். இந்த திருமணத்தின் மூலம் அவர்களுக்கு அன்ஸ் மற்றும் காஜல் என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். மோகினி பற்றிய சூழ்ச்சியை திவ்யா கண்டுபிடித்துவிடுகிறார். பிறகு வேதாஸ்ரீ அன்ஸ் மற்றும் காஜல் ஆகிய இருவரையும் தத்தெடுத்துக்கொள்கிறார்.

18 வருடங்கள் கழித்து அன்ஸ் ஒரு சாதாரண மனிதன் ஆக இருந்தாலும் பல அசாத்தியமான சக்திகளுடன் இருக்கிறான். அது பற்றி வேதாஸ்ரீ வருந்துகிறார். அதன் பின்ன என்ன நடக்கிறது, மோகினி மீண்டும் வருவாளா ? இந்த குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்பதுதான் இத் தொடரின் கதை.

Read Previous

ஏமாற்ற அலையும் கூட்டம், ‘ஔடதம்’ நேதாஜி பிரபு குற்றச்சாட்டு

Read Next

மக்கள் மீது நம்பிக்கை இருந்தது – பா ரஞ்சித் நன்றி

Most Popular