சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி

விஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு, ஏப்ரல் 21 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

அந்த நிகழ்ச்சியை மதியம் 3.30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்

2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து தமிழ் சினிமா இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.

6வது சீசனின் இறுதிப் போட்டியில், அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் பட்டம் பெறுவதற்காக போட்டி போடுகிறார்கள்.

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர் ஷங்கர் மஹாதேவன், பாடகி சித்ரா, பாடகர் SPB சரண் மற்றும் பாடகி கல்பனா ஆகியோர் உள்ளனர்.

இறுதிப் போட்டியில் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

போட்டியில் பட்டம் வெல்பவருக்கு வழக்கம் போல வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.

Read Previous

காஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ

Read Next

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்