விஜய் டிவியில் மற்றுமொரு புதிய தொடராக ‘தேன்மொழி’, திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன்மொழி, ஒரு சுட்டித்தனமான, கவலைகள் ஏதும் வைத்துக் கொள்ளாத ஒரு பெண். அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் போட்டிக்கு நிற்கிறார்.
தேன்மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். தேன்மொழி தேர்தலில் வெற்றி பெறுவாள் என கணித்து அவளை அருளுக்குத் திருமணம் செய்து தேன்மொழியை மருமகளாக ஆக்க நினைக்கிறது அருளின் குடும்பம். தேன்மொழிக்கும் அருளுக்கும் திருமணமாகிறது. அருளுக்கு தேன்மொழி மீது காதல் மலருமா ?, தேன்மொழி தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா ?என்பதுதான் இத் தொடரின் கதை.
இந்த தொடரில் தேன்மொழியாக பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ஜாக்குலின் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அருள் ஆக சித்தார்த் நடிக்கிறார்.
இத் தொடரை கதிரவன் இயக்குகிறார். சிரிப்பு, காதல், மோதல் என பல அம்சங்கள் கொண்ட தொடராக ‘தேன்மொழி’ ஒளிபரப்பாகி வருகிறது.