ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
படம் பற்றி ஆர்யா பேசுகையில்,
“இந்தப் படத்தில் மகா, முனி என இரு வேடங்களில் நடித்திருக்கிறேன். ஒருவர் கால் டாக்சி டிரைவர், மற்றொருவர் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறவர்.
நான் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். சைக்கிள் ரேஸ் மீதான அந்த காதல்தான் இந்தப் பட வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது.
சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் வலுவாக இருப்பார்கள். ‘மகாமுனி’ படத்திற்கு அப்படி ஒரு ஹீரோவை தேவை என்பதால் என்னைத் தேர்ந்தெடுத்தேன் என இயக்குனர் சாந்தகுமார் சொன்னார்.
அழுத்தமான கதை, நல்ல டீம் என்பதால் இதில் சிறு பையனுக்கு அப்பாவாக நடிக்கவும் நான் தயங்கவில்லை. இதற்கு முன்பு சில படங்களில் அப்பாவாக நடித்திருக்கிறேன்.
திருமணத்திற்குப் பின் நான் நடித்து வெளிவரும் படம் இது. இந்த மாதத்தில் ‘மகாமுனி, காப்பான்’ ஆகிய படங்கள் வெளிவருகின்றன.
தொடர்ச்சியாக ‘மல்டி ஸ்டார்’ படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
‘மகாமுனி’ டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அது போல படமும் பேசப்படும்,” என்றார்.