விஜய் ஆண்டனி படத்தில் அல்லு சிரிஷ்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவரது தம்பி அல்லு சிரிஷ். அவர் 2013ல் வெளிவந்த ‘கௌரவம்’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அந்தப் படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க உள்ள படத்தில் மற்றொரு நாயகனாக அல்லு சிரிஷ் நடிக்கப் போகிறார்.

அது பற்றி அல்லு சிரிஷ் கூறுகையில்

“இந்தப் படத்தில் நான் ஒரு அப்பாவி கிராமத்து இளைஞராக நடிக்க உள்ளேன். அதே சமயம் ஒரு மதிப்புமிக்க குடும்பத்திலிருக்கும் ஒருவன். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்,” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. ஒரே கட்டமாக கோகர்னா, டையூ, டாமன் ஆகிய கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சாந்தி டெலிபிலிம்ஸ், போப்டா மீடியா ஒர்க்ஸ், தியா மூவீஸ், இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Read Previous

‘மகாமுனி’ – இரு வேடங்களில் ஆர்யா

Read Next

வாழ்க விவசாயி, என்னை வாழ வைக்கும் – அப்புக்குட்டி