சினிமா – பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்

கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து சினிமா படப்பிடிப்புகள், பின் தயாரிப்புப் பணிகள் என எதுவுமே நடைபெறவில்லை.

கடந்த வாரம் பின் தயாரிப்புப் பணிகளை மட்டும் நடத்திக் கொள்ள அனுமதிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அதையடுத்து இன்று முதல் அந்தப் பணிகளை விதிகளுக்குட்பட்டு நடத்தலாம் என அரசு அனுமதி கொடுத்தது. அதனால் இன்று முதல் அந்தப் பணிகள் ஆரம்பமாகின.

இந்தியன் 2 படத்தின் படத் தொகுப்புப் பணி, ராங்கி படத்தின் கிராபிக்ஸ் பணி, சக்ரா, கபடதாரி படங்களின் டப்பிங் பணி ஆகியவை இன்று துவங்கின.

அடுத்த சில நாட்களில் மேலும் சில படங்களின் பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது

Read Previous

தமிழ் சினிமா – சம்பளத்தைக் குறைத்த நடிகர்கள்

Read Next

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் இரண்டு முக்கிய பதிவுகள்

Most Popular