தமிழ் சினிமா – சம்பளத்தைக் குறைத்த நடிகர்கள்

கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை.

மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே நடக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, எதிர்வரும் சிரமத்தை கருத்தில் கொண்டு சில நடிகர்கள் அவர்களது சம்பளத்தைக் குறைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் 25 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார். 

நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோரும் அது போலவே 25 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

நடிகர் உதயா 40 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்றும், நடிகர் அருள்தாஸ் 2020 முடிய சம்பளமே வேண்டாம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

காமெடி நடிகை ஆர்த்தி இன்னும் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு ரூபாய் சம்பளம் மட்டும் போதும் எனத் தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு பல தயாரிப்பாளர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இருப்பினும் அதிக சம்பளம் வாங்கும் மற்ற நடிகர்களும், நடிகைகளும் இது போல அறிவித்தால்தான் சினிமா சிறப்பாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Read Previous

ரஜினிகாந்தை முந்திய கமல்ஹாசன்

Read Next

சினிமா – பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்

Most Popular