பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் ஆந்தாலஜி படம் ‘ஷ்’.
படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன், பிருத்வி ஆதித்யா, வாலி மோகன்தாஸ், ஹரீஷ் ஆகியோர் இயக்கும் நான்கு கதைகள் இப்படத்தில் இடம் பெறுகிறது.
நான்கு வெவ்வேறு வயது நிலைகளில், வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளைப் பேசும், நான்கு கதைகளை உள்ளடக்கிய படம் இது.
இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது.
தமிழில் காமத்தினை பேசு பெருளாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் தான் ‘ஷ்’.
ஸ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப், அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி ஆகியோர் இப்படத்தில்
படத்தின் டிரைலர் வெளியீடு, பட வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.