‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படம் ‘அழகிய கண்ணே’

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்து தயாரிக்கும் படம் ‘அழகிய கண்ணே’.

எஸ்தர் என்டர்டெய்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் இப்படத்தை விஜயகுமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் சீனு ராமசாமியின் உதவியாளர்.

இப்படத்தில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

‘காடன்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் 
சங்கத்தமிழன் கவனிக்கிறார். நடனத்தை ராதிகா அமைக்க, தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் ஆகியோரும் கவனிக்கிறார்.

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கும் படப்பிடிப்பு அடுத்து மதுரையில் தொடர்ந்து நடக்க உள்ளது.

இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

‘ஷ்’ – படப்பிடிப்பு நிறைவு

Read Next

பிப்ரவரி 13ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular