மூவி ஸ்லைட் நிறுவனம் தயாரிப்பில் ஜிஎன்ஆர். குமரமவேலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், அருண் விஜய் பாலக் லால்வானி மற்றும் பலர் நடிக்க உருவாகும் படத்திற்கு ‘சினம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
‘குற்றம் 23’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
படம் பற்றி அருண் விஜய் கூறுகையில்,
“எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும்.
கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச் சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும்.
தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதை நாயகன் அப்படியான சினம் கொண்டவன்.
இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது,” என்றார் அருண் விஜய்.