சாம் ஆண்டன் இயக்கத்தில் கங்கணா

சாம் ஆண்டன் இயக்கவுள்ள புதிய படத்தினை கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் ‘டெடி’. இந்தப் படத்தினை தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாரிக்க முடிவு செய்தது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். தற்போது தெலுங்கில் ‘பட்டி’ என்ற பெயரில் தயாரித்து முடித்துள்ளது.

முதலில் சந்தீப் கிஷன் நடிப்பில் தொடங்கப்பட்ட படத்தில் தற்போது அல்லு சிரிஷ் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘டெடி’ இந்தி ரீமேக் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில் கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘டெடி’ கதையினை நாயகி சம்பந்தப்பட்ட கதையாக முழுமையாக மாற்றியுள்ளார் சாம் ஆண்டன். இதனை கேட்டு கங்கணாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக இருப்பதால், அவை முடிந்தவுடன் இந்தப் படத்திற்காக தேதிகள் ஒதுக்கியுள்ளார் கங்கணா. இந்தப் படத்தினை இயக்கும் முன்பு, வேறொரு படத்தினை சாம் ஆண்டன் இயக்குவார் எனத் தெரிகிறது.

Read Previous

‘ரஜினி 171’ படத்தில் ரன்வீர்சிங்?

Read Next

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது? – வெளியீட்டுத் திட்டம் என்ன?