‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது? – வெளியீட்டுத் திட்டம் என்ன?

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது, வெளியீட்டுத் திட்டம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் முழுமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ’விடாமுயற்சி’ குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின.

இதனை பொய்யாக்கும் விதத்தில் நேற்று (ஏப்ரல் 4) அஜித் விபத்தில் சிக்கிய சின்ன வீடியோ ஒன்றினை ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டது. இந்தப் பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. தற்போது அடுத்தகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி இரவு மீண்டும் அஜர்பைஜான் செல்லவுள்ளது படக்குழு.

ஏப்ரல் 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுவே இறுதிகட்டப் படப்பிடிப்பு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து காட்சிகள், பாடல் படப்பிடிப்பு என இந்த முறை படுவேகமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது.

அனைத்து பணிகளையும் முடித்து ’விடாமுயற்சி’ படத்தினை அக்டோபரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Read Previous

சாம் ஆண்டன் இயக்கத்தில் கங்கணா

Read Next

கள்வன் – விமர்சனம்

Most Popular