’சலார் 2’ படப்பிடிப்பு எப்போது? – முழு விபரம்

‘சலார் 2’ படப்பிடிப்பு எப்போது என்பது தெரியவந்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும், தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் மிக குறைந்த அளவிலேயே டி.ஆர்.பி பெற்றுள்ளது. ஆனால், முதல் பாகத்துடன் இந்தப் படம் முடிவடையவில்லை.

முதல் பாகத்தின் தோல்வியால், இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது. மேலும், 2-ம் பாகம் வாய்ப்பே இல்லை என்று சிலர் செய்திகளை வெளியிட்டார்கள். அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக ‘சலார் 2’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு பெங்களூருவை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

2-ம் பாகத்திற்கு சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன. இதர காட்சிகள் யாவும் பிரபாஸ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் தேதிகளை வைத்து நடத்த படக்குழு பேச்சுவார்த்தையினை தொடங்கிவிட்டது. 2025-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படத்தினை வெளியிட வேண்டும் எனவும் முடிவு செய்துவிட்டது.

Read Previous

கரீனா கபூர் நீக்கம்: நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை

Read Next

விஜய் படத்தினை நிராகரித்த ஸ்ரீலீலா