தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அதன்பின் தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கவேயில்லை. தெலுங்கு, ஹிந்தி என வேறு பக்கம் போய்விட்டார்.

ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள ‘அருவா’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்கு தற்போது ஒரு மறுப்பு தெரிவித்துள்ளார் பூஜா.

“ஹலோ, ஹலோ, இப்போதைக்கு நான் தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இப்போது எந்தப் படத்திலும் நான் கையெழுத்திடவில்லை. சில படங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நிச்சயம் இந்த வருடத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கிறேன். அனைத்தும் நன்றாக நடந்தால், நடக்கும்,” என டிவிட்டரில் கூறியுள்ளார்.

சூர்யா படமோ அல்லது விஜய் படமோ பூஜா இந்த வருடம் தமிழுக்கு மீண்டும் வருவது உறுதி என்பது இதன் மூலம் தெரிகிறது

Read Previous

பிரதமர் நிதி – கங்கனா ரணவத் 25 லட்சம் நிதியுதவி

Read Next

மாஸ்டர் – கதை என்ன தெரியுமா ?

Most Popular