பிரதமர் நிதி – கங்கனா ரணவத் 25 லட்சம் நிதியுதவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.

கொரானோவை சமாளிக்க நிவாரண நிதி வழங்குமாறு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதற்காக கங்கனா ரணவத் 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இது பற்றிய தகவலை கங்கனாவின் சகோதரி ரங்கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் கங்கனாவின் அம்மா ஒரு மாத பென்ஷன் தொகையை வழங்கியுள்ளார். ரங்கோலி அவரது கணவர், கங்கனாவின் தம்பி ஆகியோரும் நிதியுதவி தந்துள்ளார்களாம்.

100 ரூபாயாக இருந்தால் கூட அந்த உதவி சிறப்பானது என ரங்கோலி தெரிவித்துள்ளார்.

மேலும், தினசரி வேலை செய்யும் பலருக்கும் உணவுகளை கங்கனா வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் நடிகர்கள் யாருக்கும் இன்னும் நாட்டுப்பற்று வரவில்லை போலிருக்கிறது. பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் எந்த உதவியும் அறிவிக்கவில்லை. 

சிவகார்த்திகேயன் மட்டும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நேற்று 25 லட்சம் அறிவித்துள்ளார

Read Previous

‘நவராத்திரி’ படத்தின் ரீமேக் வரலாறு

Read Next

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே