‘நவராத்திரி’ படத்தின் ரீமேக் வரலாறு

சிவாஜிகணேசன் நடித்த படங்களில் முக்கியமான ஒரு படமாக 1964ம் ஆண்டு வெளிவந்த ‘நவராத்திரி’ படம் அமைந்தது.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்த படம் அது. அப்படத்தில் சிவாஜிகணேசன், 9 வேடங்களில் நடித்தார்.

நவரசம் என்று சொல்லக் கூடிய அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய ஒவ்வொன்றும் சிவாஜி நடித்த 9 கதாபாத்திரங்களின் தன்மையாக இருக்கும்.

அப்படம் வெளிவந்த போது வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அதன் பிறகு வெளியான போது வசூலைக் கொடுத்தது.

அப்படத்தை தெலுங்கில் ‘நவராத்ரி’ என்ற பெயரில் 1966ம் ஆண்டு ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தெலுங்கில் நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்தார்கள்.

ஹிந்தியில் 10 வருடங்கள் கழித்து, 1974ல் ‘நயா தின் நை ராத்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். சஞ்சீவ் குமார், ஜெயபாதுரி நடித்தார்கள்.  ஏ.பீம்சிங் இப்படத்தை இயக்கினார்.

நவராத்திரி – திரைப்படம் – 

Read Previous

இது நியாயமா விஜய் சேதுபதி ?

Read Next

பிரதமர் நிதி – கங்கனா ரணவத் 25 லட்சம் நிதியுதவி

Most Popular