இது நியாயமா விஜய் சேதுபதி ?

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும். 

ஆனால், அதே புகைப்படம் கொண்ட விளம்பர போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வந்தால் எந்த எச்சரிக்கை வாசகமும் தேவையில்லை. 

விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் ‘உப்பெனா’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு விஜய் சேதுபதி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

சமீப காலமாக இம்மாதிரியான போஸ்டர்களை யாரும் விளம்பரப்படுத்துவதில்லை. முன்னர் இப்படி வெளியான போஸ்டர்கள் எதிர்ப்பு காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன.

சமூக அக்கறையுடன் அடிக்க பேசும் விஜய் சேதுபதி இந்த சிகரெட் பிடிக்கும் புகைப்பட போஸ்டரை வெளியிட வேண்டாம் என படத்தின் இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் தெரிவித்திருக்கலாமே ?

Read Previous

மாஸ்டர் – பொளக்கட்டும் பற பற – பாடல் வரிகள் வீடியோ

Read Next

‘நவராத்திரி’ படத்தின் ரீமேக் வரலாறு