லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.
இப்படத்தின் நாயகனாக விஜய் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் இல்லையாம், அது ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்கிறார்கள்.
சிறு வயதிலிருந்தே விஜய்யும், விஜய் சேதுபதியும் நண்பர்களாம். இருவரது குணங்களும் எண்ணங்களும் வெவ்வேறாக இருக்கிறது. விஜய் படித்து முடித்து ‘மாஸ்டர்’ ஆகிறார், விஜய் சேதுபதி ‘கேங்ஸ்டர்’ ஆகிறார். இருவருக்கும் மோதல் எப்படி வருகிறது, எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.
படத்தின் இசை வெளியீடு நடந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று பாடல்களின் பாடல் வரிகள் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். எப்போது படத்தின் டீசர் அல்லது டிரைலர் வரும் என விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.