விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத் திரை’.
இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா, இப்படத்தின் இயக்குநர் P.S. மித்ரன், மற்றும் இயக்குனர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு, தனஞ்செயன், 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது,
“இரும்புத் திரை’ படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். ‘பாண்டிய நாடு’ தொடங்கி நிறைய படங்களைஙம தயாரித்துள்ளோம். இப்படத்தை முதலில் ஏப்ரல் 14ல் வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், படம் வெளி வருவதில் தாமதமானது.
R.K நகர் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக் கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில், படம் மீண்டும் தள்ளிப் போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.
சோறு போட்ட இந்த சினிமா துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் என் குழுவோடு இணைந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சொன்ன விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. இருந்தாலும் செயல்பாடுகளில் தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.
மித்ரன் ‘இரும்புத் திரை’ கதையை எனக்குக் கூறும் போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது. ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பின்பு இந்தப் படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன். மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும். எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது. ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமாக இருந்தது.
‘இரும்புத் திரை’ என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் நடிக்கிறேன். ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிர்ச்சனைகளும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.
என்னுடைய குருநாதர் அர்ஜுன் சார், அப்பாவை தொலைபேசியில் அழைத்து, இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா, இவன் என்னைய வில்லனா மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார். ஏன்னா அவர் தான் எனக்கு ஊக்கம் கொடுத்து ‘செல்லமே’ படத்தில் என்னை ஹீரோவாக உருவாக்கினர். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் கடைசியில் சண்டைக் காட்சி ஒன்று உள்ளது. அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம். படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிகச் சிறப்பாக அமைத்துள்ளது.
விழாவில் சமந்தா பேசியதாவது,
‘இரும்பு திரை’ படத்தில் கதையும், காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் விஜய் சார், சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால், இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட்,” என்றார் சமந்தா.
‘இரும்புத் திரை’ படம் ஜனவரி 2018ல் வெளியாக உள்ளது.