நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை – கீர்த்தி சுரேஷ்

ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

சூர்யாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் படம் பற்றியும், அவருடைய கதாபாத்திரம் பற்றியும் கூறியதாவது,

“தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நான் பிராமணப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நகைச்சுவையும் சஸ்பென்ஸும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.

பள்ளியில் படித்த போது சிறு வயதிலேயே  நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய அம்மா, சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர், அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார்.

செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் ‘டெட்டி பேரை’ப் போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம்.

ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவர்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். ‘பாகுபலி’ வெளியான நேரத்தில் அவர்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துதான் வசனத்தைக் கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும்.

அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளி வந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது.

Read Previous

2017 தமிழ் சினிமா – வசூலும், வரவேற்பும் பெற்ற படங்கள்

Read Next

களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

Most Popular