2017 தமிழ் சினிமா – வசூலும், வரவேற்பும் பெற்ற படங்கள்

2017ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்ற படங்கள் பத்துக்கும் குறைவு. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்கள் ஐந்துக்கும் குறைவு.

இருந்தாலும் அனைத்து தரப்பிலிருந்தும் வியாபாரம், வசூல், விமர்சனம், வரவேற்பு மற்ற தொழில்நுட்ப விஷயங்களையும் சேர்த்து இந்த வருடத்தின் சிறந்த படங்கள் என ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படங்கள்….

வசூல் அடிப்படையில் ‘மெர்சல்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றால் வரவேற்பு, சிறப்பு அடிப்படையில் ‘விக்ரம் வேதா’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிறந்த சமூகக் கருத்துக்களைச் சொன்னதன் பட்டியலில் ‘அறம், அருவி’ ஆகிய படங்களுடன் சமீபத்தில் வெளிவந்த ‘வேலைக்காரன்’ படமும் இடம் பெறுகிறது.

காவல் துறையின் கடமையை, வீரத்தை, முயற்சியை இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படமும் இந்த அளவிற்கு சொன்னதில்லை என்ற பாராட்டைப் பெற்ற படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

பெரிய முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லை என்றாலும் நல்ல படம் என்று விமர்சகர்களாலும், பாராட்டைப் பெற்ற சில படங்களில் ‘ஒரு கிடாயின் கருணை மனு, நிபுணன், மாயவன்’  ஆகியவையும்,  ரசிகர்களால் பாராட்டைப் பெற்ற படங்களில் “குற்றம் 23, மாநகரம்,  அவள்,” ஆகியவை முக்கியமான படங்கள்.

வசூலில் வரவேற்பைப் பெற்ற படங்கள் என திரைவர்த்தகர்களால் சொல்லப்படும் படங்களில், ‘பாகுபலி 2’ படம் 100 கோடிக்கும் மேல் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மற்ற வசூல் படங்களில், “மீசைய முறுக்கு, மரகத நாணயம், கருப்பன், துப்பறிவாளன், ஹரஹர மகாதேவகி,’ ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன.

 

Read Previous

இரவிலேயே பயணிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

Read Next

நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை – கீர்த்தி சுரேஷ்