பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார், ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நாயகன் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.
இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ரஜத் ரவிசங்கர் ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
இன்று நடைபெற்ற பூஜையில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன், ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிவகுமார் கிளாப் அடிக்க, சூர்யா கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
மார்ச் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு, ஹைதராபாத், மும்பை, இமயமலை, ஐரோப்பா நாடுகள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.