மீண்டும் அரசியல் படத்தில் சத்யராஜ்

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த அரசியல் படங்களிலேயே மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்த திரைப்படம் சத்யராஜ் நடித்த ‘அமைதிப் படை’.

அந்த அளவிற்கு இல்லை என்றாலும் அதில் கொஞ்சம் அளவுக்காவது அரசியல் நையாண்டி கலந்து வெளிவந்த படம் ‘அடிதடி’.

2004ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தை சுந்தரி பிலிம்ஸ் ஞானசுந்தரி தயாரிக்க ஷிவ்ராஜ் இயக்கியிருந்தார். அந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது.

‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.

இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன் முறையாக ஹிந்தியில் தடம் பதிப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Read Previous

கார்த்தியின் 17வது படம் இன்று ஆரம்பம்

Read Next

Kaala (Tamil) – Official Teaser