‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, இயக்குனர் கே.வி. ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்தப் படம் சூர்யாவின் 37வது படம்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
கே.வி. ஆனந்த் – சூர்யா இணைந்த ‘மாற்றான்’ படம் வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
கேவ்மிக் எரி ஒளிப்பதிவு செய்ய கிரண் கலை இயக்கம் செய்கிறார்.
இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், அது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.
இதனிடையே, இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.வி. ஆனந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Core team for my next film with @Suriya_offl : Produced By @LycaProductions @Jharrisjayaraj #PattukottaiPrabhakar – Dop #GavmicAry – Art @KiranDrk
— anand k v (@anavenkat) March 13, 2018
அதற்கு பதிலளித்துள்ள சூர்யா, அனைவரது அன்பும், ஆசீர்வாதமும் தேவை எனக் கூறியுள்ளார்.
We need all your love and blessing …!! 🙏 https://t.co/BtejptGObQ
— Suriya Sivakumar (@Suriya_offl) March 13, 2018
விரைவில், இந்தப் படம் பற்றிய மற்ற விவரங்கள் அறிவிக்கப்படலாம்.
#Suriya37 #KVAnand #Suriya