பைரசிக்கு சவால் விடும் தொழில்நுட்பத்தில் ‘கிரிஷ்ணம்’

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் ‘கிரிஷ்ணம்’.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே ‘கிரிஷ்ணம்’ படத்தின் கதை.

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் சந்தியா பாடல்களை எழுதுகிறார்.

‘‘கிரிஷ்ணம்’ ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த படம்.

உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே இட்டுச் செல்லும் பரபரப்புடன் அமைந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை,” என்கிறார் இயக்குனர்.

மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.

இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Read Previous

மீண்டும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணி

Read Next

நட்புனா என்னானு தெரியுமா – டிரைலர்

Most Popular