‘காலா’ சென்சார் அனுமதி கடிதம், தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடிப்பு ?

ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி மற்றும் பலரது நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திரையுலகத்தில் தற்போது நடந்து வரும் வேலை நிறுத்தத்தால் மார்ச் 1ம் தேதி முதல் எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதமும் இந்த வேலைநிறுத்தம் தொடருமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வரலாம்.

நேற்று தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. தியேட்டர்காரர்கள் தரப்பில் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

இதனிடையே, ‘காலா’ படத்தை சென்சார் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தர வேண்டிய சென்சார் அனுமதி கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் முறைப்படி தராமல் இழுத்தடிப்பதாக ‘காலா’ படக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த அனுமதிக் கடிதம் கிடைத்த பிறகுதான் சென்சார் குழுவினர் படத்தின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இது குறித்து விசாரித்த போது, விண்ணப்ப வரிசைப்படி படங்களுக்கான அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து வருகிறோம். அதன்படி ‘காலா’ படத்திற்கும் கொடுப்போம் என்றார்கள்.

‘காலா’ சென்சார் அனுமதிக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் தரவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகவும் ‘காலா’ தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Read Previous

சீனா ரிலீஸ் – 2000 கோடி வசூலைத் தொடுமா ‘பாகுபலி 2’

Read Next

நாயை வைத்து ஒரு அட்வென்சர் படம்

Most Popular