நாயை வைத்து ஒரு அட்வென்சர் படம்

இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. படங்களில் விலங்குகளை வைத்தும் தமிழில் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி உள்ளன.

அப்படி விலங்கை மட்டுமே மையமாக வைத்து ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. ஒரு நாய்தான் படத்தின் மையக் கதாபாத்திரம். இந்த படத்தை ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.

இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லைத் தொடும் விதத்தில் உருவாக்கப்பட உள்ளதாம்.

கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகத் தெரிகிறது. ஒரு நாய்க்கும், ஒரு மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவையும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் விதமும்தான் படத்தின் ஹைலைட்.

குழந்தைகளையும் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இந்தப் படம் இருக்குமாம்.

Read Previous

‘காலா’ சென்சார் அனுமதி கடிதம், தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடிப்பு ?

Read Next

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு