தமிழ் புத்தாண்டான விளம்பி ஆண்டு இன்று பிறப்பதை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்…
உலகெங்கும் வாபம் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி ஏற்போம்.
மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர், தமிழால் இணைவோம்.
ரஜினிகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்…
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.