ஜோதிகா ஜோடியாக விதார்த்

ஹிந்தியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘தும்ஹாரி சுலு’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.

ராதாமோகன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விதார்த் தேர்வு செய்தது பற்றி படத்தின் இயக்குனர் ராதாமோகன் கூறுகையில்,

“இது வழக்கமான நாயகன் கதாபாத்திரம் அல்ல. கதாபாத்திரத்தின் சிறு சிறு உணர்வுகளைக் கூட சரியாகப் புரிந்து கொண்டு அதைத் திரையில் கொண்டு வரும் நடிகரைத் தேர்வு செய்ய விரும்பினோம். இப்போதுள்ள இளம் நடிகர்களில் விதார்த் அதற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்தோம்,” என்கிறார்.

இப்படத்தை ஜி. தனஞ்செயன் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

தமிழ் புத்தாண்டு – ரஜினி, கமல் வாழ்த்து

Read Next

பெப்சி கூட்டமைப்புக்கு விஷால் 10 லட்சம் உதவி