பெப்சி கூட்டமைப்புக்கு விஷால் 10 லட்சம் உதவி

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 45 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

மார்ச் 16ம் தேதி முதல் இறுதிக் கட்டப் பணிகள், படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகமான கட்டணங்களால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு திரையுலகத்தின் தொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்துள்ள கூட்டமைப்பான பெப்சி ஆதரவாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக அந்தத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

அதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பெப்சிக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ஏற்கெனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

வரும் 17ம் தேதி தமிழக அரசு திரையுலக சங்கங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. அதன் பிறகே இந்த வேலை நிறுத்தம் பற்றிய முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

Read Previous

ஜோதிகா ஜோடியாக விதார்த்

Read Next

நடிகையர் திலகம் – டீசர்