தொரட்டி – தென் மாவட்டத்து உண்மைக் கதை

ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி. மாரிமுத்து வசனம் எழுதி இயக்கும் படம் ‘தொரட்டி’.

1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தொரட்டி’.

கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் படமாக உருவாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஒரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் ‘வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாரம்’ இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்யத் துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் படத்தில் யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மாயன் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக செம்பொன்னு என்ற கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா நடித்திருக்கிறார். மற்றும் நல்லையாவாக அழகு, சோத்துமுட்டி, ஈப்புலி, செந்தட்டி என்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சினேகனின் கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் இசையமைக்க, பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் அமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ராஜா முகமதுவும், ஒளிப்பதிவை குமார் ஸ்ரீதர் செய்திருக்கிறார்.

Read Previous

ரம்ஜானை முன்னிட்டு ‘காலா’ ரிலீஸ் ?

Read Next

ஸ்டன்ட் யூனியன் விழா, ரத்ததானம் செய்த விஜய்சேதுபதி

Most Popular