ரம்ஜானை முன்னிட்டு ‘காலா’ ரிலீஸ் ?

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’.

இந்தப் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், திரையுலகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் வெளியாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

சென்சார் செய்யப்பட்டதன் வரிசையில்தான் படங்களை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் சென்சார் செய்யப்பட்ட படங்கள்தான் தற்போதைய ஸ்டிரைக் முடிந்த பிறகு வரிசைப்படி வெளியாகும்.

எனவே, ‘காலா’ படத்தை ஜுன் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என முன்பே செய்திகள் வெளியாகின. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ஜுன் மாதம் 16ம் தேதி ரம்ஜான் வருவதால் ஜுன் 15ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

ஸ்டிரைக் முடிந்த பிறகுதான் படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் அனைத்து தயாரிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

‘காலா’ ஜுன் மாதம் வந்தாலும் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படம் எப்போதும் வரும் என்று இன்னமும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

Read Previous

தயாரிப்பாளர் ஆகும் நடிகை சதா

Read Next

தொரட்டி – தென் மாவட்டத்து உண்மைக் கதை