சிவகாசி தீ விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.40 லட்சம் பெறுமானமுள்ள ஆயுர்வேத மருந்துகளை இலவசமாகவே வழங்கி, சிவகாசி மக்கள் மனதில் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் நடிகர் மம்முட்டி.
தமிழ், தமிழ் என மூச்சு முட்ட முழங்கும் நம்மவர்களுக்கு முன்னதாக சமயத்தில் அவர் செய்த இந்த உதவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை…நன்றி சேட்டா…..
நன்றி சொல்ல உனக்கு…வார்த்தையில்ல எனக்கு…என்ற உங்களின் ‘மறுமலர்ச்சி ’ படப் பாடல்தான் ஞாபகம் வருகிறது…