‘கும்கி’ கை மாறியது…

     திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் , பிரபு சாலமன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில் தயாராகி உள்ள படம் கும்கி. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

     இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் வந்து கலந்து கொண்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கி விட்டனர்.

     இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளி வந்த மைனா படத்தை ரெட்ஜெயன்ட் மூவீ ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டு மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தந்தது.

     இப்போது, பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளி வர உள்ள கும்கி படத்தை  ‘ஸ்டுடியோ’ க்ரீன் நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

மனதில் இடம் பிடித்த மம்முட்டி…

Read Next

சுந்தரபாண்டியன் – டைட்டிலுக்கு தடை….

Most Popular