ஆஸ்கர் விருதில், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான போட்டியில், கலந்து கொள்ள இருக்கும் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்வதற்கான திரையில்ட கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
ஈகா -தெலுங்கு (நான் ஈ), 7ம் அறிவு, வழக்கு எண் 18/9, உள்ளட்ட 20 படங்கள் இந்தியத் திரைப்படத்திற்கான தேர்வில் இடம் பெற்றிருந்தன. தற்போது ஏகமனதாக ‘பர்ஃபி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா, நடித்து, அனுராக் பாஸு இயக்கியுள்ள இந்த படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள ரவிவர்மன் ‘பர்ஃபி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பர்ஃபி திரைப்படம் கலந்து கொள்ள இருக்கிறது. ஈகா(நான் ஈ) திரைப்படம் டெக்னிக்கலாக சிறப்பாக இருந்ததாக, தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனார்.தெலுங்கு திரையுலகினர் பலரும் ஈகா (நான் ஈ) திரைப்படம் தேர்வாகும் என எதிர்பார்த்திருந்தனர், தற்போது பர்ஃபி திரைப்படம் தேர்வானது அவர்களுக்கு சற்று ஏமாற்றமே.