ஹிந்திக்கும் ‘ரீமேக்’ செய்யும் ராஜா

     ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தன் தம்பி ‘ஜெயம் ரவி’யை நாயகனாக வைத்து எம்.குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும், தில்லாங்கடி என்ற சுமாரான படத்தையும் கொடுத்தார்.

விஜய்யை வைத்து இவர் இயக்கிய மற்றுமொரு ரீமேக் படமான வேலாயுதம் படமும் சுமார் படம் பட்டியலில்தான் இணைந்தது.  ரீமேக் படம் ஆனாலும் ‘மேக்கிங்’ல் அசத்தக் கூடியவர் ராஜா என பெயரைப் பெற்றவர்.

இப்போது ஒரு ஹிந்திப் படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பவர் அக்ஷய் குமார். இந்த படமும் ஒரு ரீமேக் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2002ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘ரமணா ’ படத்தைத்தான் இப்போது ரீமேக் செய்யவிருக்கிறார். இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க வி.வி.விநாயக் இயக்க, 2003ல் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இப்போது ஹிந்தியில் தயாராக இருக்கிறது. நாயகியாக தமன்னா நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரீமேக் படங்களின் ராஜாவான ராஜா, இந்த படத்தையும் சூப்பர்ஹிட் வெற்றிப்படங்களின் வரிசையில் சேர்த்து விடுவார் என தாராளமாக நம்பலாம்.

Read Previous

அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ‘பேரலை’

Read Next

‘ஈ’ யை சாப்பிட்ட ‘பர்ஃபி’

Most Popular