துப்பாக்கி படத்தின் தலைப்புக்கும் கள்ளத் துப்பாக்கி படத்தின் தலைப்புக்குமான பிரச்சனை நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வழக்கு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் துப்பாக்கி படத்தின் தலைப்பு மாற இருக்கிறது என ஒரு செய்தி திரையுலக வட்டாரங்களில் பரவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
சில வாரங்களுக்கு முன் ‘சரவெடி’ என மாற இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் ‘திருட்டுப்பயலே’ ஜீவன் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘சரவெடி’ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்து விட்ட நிலையில் தற்போது துப்பாக்கி படத்தின் தலைப்பு மாற இருப்பதாக மீண்டும் ஒரு செய்தி காற்று வாக்கில் பரவிக் கொண்டிருக்கிறது.தற்போது ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்பு ‘மும்பைத் தமிழன்’ என மாற இருப்பதாக செய்தி பரவி வருகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மும்பையில் நடப்பதால் இந்த பெயர் வைக்கப்படலாம் என காரணத்துடன் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் செய்தியாளர்கள்.
சீக்கிரமா படத்தோட தலைப்பை சொல்லிடுங்க…தீபாவளிக்கு முன்னாடியே வெடி வெடிச்சி கொண்டாட, விஜய் ரசிகர்கள் தயாரா இருக்காங்க.