‘சரித்திரப்’ படத்தில் அனுஷ்கா

    மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா. அழகாலும், திறமையான நடிப்பாலும் அதிக ரசிகர்களை இரு மொழிகளிலும் பெற்றிருப்பவர்.

பொதுவாக இவர் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கில், ஏதாவது ஒரு மொழியில் டப்பிங் செய்யப்பட்டாவது வெளியாகி விடுகிறது. அதற்கு சமீபத்திய தாண்டவம் வரை உதாரணமாகச் சொல்லலாம்.

ரெண்டாவது உலகம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நாயகியாக நடித்து வரும் அனுஷ்கா அடுத்து அஜித் படத்திலும் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

இதற்கடுத்து, தெலுங்கின் முன்னணி இயக்குனர் குணசேகர் தமிழ், தெலுங்கில் இயக்க இருக்கும் ஒரு ‘சரித்திரப்’ பின்னணி கொண்ட கதையில் அனுஷ்காவை நடிக்க வைப்பதற்காக பேச்சு வார்த்தையை ஆரம்பித்து விட்டார்.

தற்போது படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருக்கும் அனுஷ்கா , திரும்பி  வந்ததும் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதிப்பார் எனத் தெரிகிறது.

 

Read Previous

தெலுங்கிலும் ‘வீழ்ந்த’ தாண்டவம்

Read Next

அஜித் படத்தின் டைட்டில் விரைவில்…