கடந்த வாரம் தமிழில் வெளியான தாண்டவம் படு தோல்வியைச் சந்தித்து அந்த படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
தற்போது நேற்று தெலுங்கிலும் சிவ தாண்டவம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே, டப்பிங் படத்தை நேரடி படம் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சொல்லி ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியதால் படம் ஒரு வாரம் தள்ளிதான் வெளியானது.
அதற்குள், தமிழில் இந்த படத்துக்கு கிடைத்த ரிசல்ட் ஆந்திர தேசத்தை சென்றடைந்ததால், அங்கு படத்தை பல ஏரியாக்களில் வாங்க யாருமே வரவில்லை என்ற தகவல் ஆந்திராவிலிருந்து வந்தடைந்துள்ளது.
விமர்சகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ள சிவ தாண்டவம், விக்ரமின் நடிப்புக்கு மட்டும் பேசப்படும் படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது.