சென்னையில் 32 தியேட்டர்களில் ‘மாற்றான்’

     ‘சிவாஜி’ படத்தில் தொடங்கிய ஒரு படத்தை திரையிடும் வியாபார நுணுக்கம் தொடர்ந்து பல படங்களை தொடர வைத்து விட்டது. ஒரு படத்தை பல திரையரங்குகளில் வெளியிடும் நுணுக்கம்தான் அது.

‘சிவாஜி’ திரைப்படம் சென்னையில் ஏறக்குறைய 15 திரையரங்குகளில் வெளியானது. பின்னர் அது மற்ற படங்களின் மூலம் இன்னும் அதிகமானது. இப்போதெல்லாம் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா நடிக்கும் படங்கள் 25க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கும் மேலாக வெளியாகிறது.

திரையிட்ட ஒரு சில நாட்களிலேயே ரசிர்களின் ஆர்வத்தை குறைக்காமல் அவர்களை உடனே படம் பார்க்க வைக்கும் வியாபார தந்திரம்தான் இது. மேலும், படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான விஷயங்கள் வெளிவருவதற்கு முன்னரே ரசிகர்களை திரையரங்குகளுக்கும் இழுக்கும் உத்தியும் கூட.

இம்மாதம் வெளியாக இருக்கும் மாற்றான் படம் சென்னையில் மட்டும் 32 திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் படம் வெளியான முதல் வாரத்திலேயே கோடிகளில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

அஜித்,அனுஷ்கா,சந்தானம் இணையும் படம்

Read Next

தெலுங்கிலும் ‘வீழ்ந்த’ தாண்டவம்