அஜித் படத்தின் டைட்டில் விரைவில்…

     பில்லா 2 படத்திற்குப் பிறகு அஜித் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்டத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இதுவரை எந்த டைட்டிலும் வைக்கப்படவில்லை. தற்போது ஒரு சில டைட்டில்களை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த புதிய டைட்டிலுடன், தீபாவளி தினமான நவம்பர் 13ம் தேதியன்று படத்தின் சிறு முன்னோட்டமோ அல்லது டைட்டிலை வெளியிடும் நிகழ்வோ நடைபெற இருக்கிறது.

அஜித் படத்தை எதிர்பார்த்தது போல, இனி அஜித் படத்தின் டைட்டிலையும் சஸ்பென்ஸாக எதிர்பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

Read Previous

‘சரித்திரப்’ படத்தில் அனுஷ்கா

Read Next

தெலுங்குக்கு போகும் ‘சுந்தரபாண்டியன்’

Most Popular