தெலுங்குக்கு போகும் ‘சுந்தரபாண்டியன்’

   ற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே படம் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ‘சுந்தரபாண்டியன்’ விரைவில் தெலுங்கிலும் தயாராக இருக்கிறது.

‘தமிழ்ப்படம்’ தெலுங்கு ரீமேக்கான ‘சுடிகாடு’ படத்தை பெரும் வெற்றிப் படமாக்கிய இயக்குனர் பீமமேனி ஸ்ரீனிவாச ராவ் சுந்தரபாண்டியன் படத்தை சமீபத்தில் பார்த்தார்.

படம் அவருக்குப் பிடித்துப் போகவே இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை பேச ஆரம்பித்து விட்டார். தெலுங்கின் முன்னணி நடிகர்களை வைத்து அவர் இப்படத்தை படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகுமாரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய படம் ‘சுந்தரபாண்டியன்’  செப்டம்பர் 14ம் தேதி வெளிவந்து அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read Previous

அஜித் படத்தின் டைட்டில் விரைவில்…

Read Next

ஸ்கூலுக்குப் போகும் ஹன்சிகா

Most Popular