காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தான் இயக்கி படங்களில் யுவன்ஷங்கர் ராஜா இசையின் மூலம் இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் செல்வராகவன். இந்த மூன்று படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து இந்த கூட்டணிக்கு நல்ல பெரையப் பெற்றுத் தந்தது.
அதன் பின் இருவரும் பிரிந்து, செல்வராகன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக வைத்துக் கொண்டார். தற்போது இயக்கி வரும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
பிரிந்த நண்பர்களான யுவனும், செல்வராகவனும் தற்போது மீண்டும் இணைய இருக்கிறார்கள். செல்வராகவன் அடுத்து தமிழ், தெலுங்கில், ‘ராணா ’ வை வைத்து இயக்கப் போகும் படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா தான்.
மீண்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் கிடைக்க வாழ்த்துவோம்…