‘நான் ஈ’ யும் சுட்டதா ?

     தாண்டவம்,  மாற்றான் என படங்களின் கதைகளைப் பற்றிய பிரச்சனைகள் தற்போது புகைந்து கொண்டுள்ளது.   தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ திரைப்படத்தைப் பற்றியும் ஒரு செய்தி இணைய தளங்களில் பரவி வருகிறது.

2010ம் ஆண்டு ‘லூக் ஈவ்’ இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலப் படமான ‘காக்ரோச்’ படத்தின் தழுவல் தான் ‘நான் ஈ’ படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

‘காக்ரோச்’ ஒரு காதல், நகைச்சுவைப் படம். திருமணமான அன்றே திருமண கார் மோதி உயிரை இழக்கும் நாயகன்,  ‘கரப்பான் பூச்சி’ யாக பிறந்து விதவையாக இருக்கும் காதலியை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கதை நகர்கிறது. Love always finds its way back…என்ற கேப்ஷனுடன் வெளிவந்துள்ளது இந்த படம்.

‘நான் ஈ’, ‘காக்ரோச்’ இரண்டு படங்களின் கதை வெவ்வேறு தளங்களில் பயணித்தாலும், ‘நான் ஈ’ படம் இப்படத்தின் இன்ஸ்பிரேஷனா என்பதை இயக்குனர் ராஜமௌலிதான் சொல்ல வேண்டும்.

Read Previous

THANKS TO AJITH

Read Next

யுவன் – செல்வராகவன் இணைகிறார்கள்…