மேற்கண்ட தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடிதான் ஸ்ரீதேவி 16 வருடங்கள் கழித்து நடித்து வெளிவந்துள்ள ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் டைட்டிலில் போடுகிறார்கள்.
உண்மையாகவே அவர்கள் அஜித்துக்கு இதை விட பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் கடந்த 3 நாட்களில் படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அஜித் மட்டுமே. சிறப்புத் தோற்றத்தில் அஜித் நடித்தாலும் அதுவும் சூப்பர்தான் என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
ஏனென்றால் 40ஐ கடந்தவர்களுக்கு மட்டுமே (?) ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பும் நன்றாகத் தெரியும். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு அழகான ‘ஆன்ட்டி’தான்.
பில்லா 2 படத்தால் ரொம்பவே நொந்து போயுள்ள அஜித் ரசிகர்களுக்கு, இந்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித்தை அட்டகாசமாக பார்ப்பது ஒரு மிகப் பெரிய ஆறுதலாகவும் உள்ளது.
எது எப்படியோ, டப்பிங் படமாக வந்தால் கூட அஜித் ‘மாஸ் ஓபனிங் ஸ்டார்’ என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.